ஞாயிறு, 28 ஜூலை, 2024

இவரைத் தெரியுமா திருக்கண்ணமங்கை ஆண்டான்

 


இந்த மண்டபம், திருக்கண்ணமங்கை திரு பத்தராவிப்பெருமாள் கோவிலில்  உள்ளது. இதில் எழுந்தருளியிருப்பவர், திருக்கண்ணமங்கை ஆண்டான்.

Image credit: https://acharyas.koyil.org/index.php/thirukkannamangai-andan/

திருநக்ஷத்திரம்              திருவோணம் 

மாதம்                              ஆனி 

அவதாரஸ்தலம்             திருக்கண்ணமங்கை 


இம்மஹாசார்யர், திரு ஆண்டாளின் நாச்சியார் திருமொழிக்கு ஒரு தனியன் அருளிக்ச்சேய்துள்ளார் .

அல்லி தாமரைமேல் ஆரணங்கின் இன் துணைவி 

மல்லிநாடாண்ட மடமயில் மெல்லியலாள் 

ஆயர் குலவேந்தன் ஆகத்தான். தென் புதுவை 

வேயர் பயந்த விளக்கு. 


இவரைப்பற்றிப் பல சுவையான, உபயோகமுள்ள செய்திகளைப் படித்தேன்.

நீங்கள் இக்கோவிலுக்கு செல்ல நேர்ந்தால், முதலில் திருக்கண்ணமங்கை ஆண்டானை ஸேவிற்று விட்டு, பிறகு தாயாரையும் பெருமாளையும் சேவிக்க செல்லுங்கள். 

ஏனென்றால், இவரே பெருமாளை அடைய ஒரு உபாயமாக இருக்கிறாரா என்று பிள்ளை லோகாச்சர்யர் கூறியிருக்கிறார் .


வாழித்திருநாமம் 

அன்புடனே நாதமுனி அடி பணிந்தோன் வாழியே 

ஆனி தனில் திருவோணத்தில் அவதரித்தான் வாழியே 

இன்பமுடன் கண்ணமங்கை வந்துதித்தான் வாழியே 

எழிலுடனே நாதனாக ஆட்சி செய்தான் வாழியே 

துன்பமென தன முயற்சி நீத்த செல்வன் வாழியே 

தூமணிவண்ணன் தாள் கதி என்றான் வாழியே 

அன்பால் உலகாரியனார் போற்ற நின்றான் வாழியே 

அழகாரும் திருக்கண்ணமங்கை ஆண்டான் வாழியே 


மேலும் படிக்க https://guruparamparaitamil.wordpress.com/2016/03/11/thirukkannamangai-andan/

ஆழ்ந்த க்ருதக்ஞயை திரு சாரதி அவர்களுக்கு.
Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக