சனி, 13 ஜூலை, 2024

இவரைத் தெரியுமா _குருகைக் காவலப்பன்

 சிறுது நாட்களுக்கு முன், அடியேன் , ஒரு வலைத் தளத்தில், திரு குருகைக்காவலப்பன் அவர்களை  பற்றி வாசிக்க நேர்ந்தது. அதை அப்படியே,  இங்கு பதிவு செய்துள்ளேன். 

பதிவின் இறுதியில், இதை முதலில் யார் பதிவிட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளேன். 

அவர் பெயர் சாரதி T. அவர், இதை ஒரு கைங்கர்யமாக செய்கிறேன் என்று எழுதி இருந்தார்.

இதை பற்றி, திரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் உபன்யாசத்தில் பல முறை கேட்டிருக்கிறேன். இருந்தாலும், நேரே படிக்கும்போது என் உணர்ச்சிகள் வேறு  விதமாக இருந்தது. 

பிராட்டியே கூப்பிட்டாலும், அதை பொருட்படுத்தாது ,  பெருமாள் என்னையே பார்த்துக்கொண்டிருப்பர் என்று படிக்கும்போது, பெருமாள் திரு குருகைக்காவலப்பனிடன் கொண்டுள்ள மதிப்பு தெரிந்தது. எப்பேர்ப்பட்ட பக்தர் இவர்!


இப்பேற்பட்ட ஆச்சர்யனின் ஒரு கடைக்கண் பார்வை என் மேல் பட்டால் , நானும் கூட உய்ந்து போவேனே. ஆனால், இனிமேல் கோவில்களுக்கு சென்று பெருமாளை செவிப்பதோ, கைங்கர்யம் செய்வதோ என்னால் இயலாது.

 ஆதலால், அடியேனும், இந்த மாதிரி , பெரும்பாலான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தெரியாத , பிரமிப்பூட்டும் பக்தியை உடைய ஆச்சார்யர்களை பற்றி, தெரியப்படுத்துவதையே கைங்கர்யமாக செய்வது என்று முடிவு செய்து, இதை பதிவிட்டுள்ளேன். 

எப்படி, இது  என்னை வந்தடைந்து, எனக்குள் இப்படியொரு பக்தியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியதோ, அந்த நப்பாசையில் , இந்த முயற்சியும் ஒன்று இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்க்ளை சென்று அடையதா என்று தொடங்கி இருக்கிறேன். 

அவ்வாறு, அந்த ஒன்று இரண்டு பேரும் , என் சம்பத்தப்பட்ட வர்களாய் இருந்து, என்றேனும் , திரு குருகைக்கவல்லபன் கோவிலுக்கு சென்று, அவருடைய கடாக்ஷம் பெற்றால், அதனால் அடியேனும் மோக்ஷம் பெறலாம் அல்லவா .

என்னுடய நண்பர்கள் கீதா வேணுகோபாலனோ , சோலைமலை கோபாலோ, திரு குருகைக்காவலப்பன்  சம்பந்தம்  பெற்றாலோ , இல்லை, அவர்கள் மூலமா வேறு இருவர் திருக்குருகைக்காவலப்பன் அவர்களின் சம்பந்தம் பெற்றாலோ, அடியேனும் உய்ந்து போவென்.

Quote starts.

"குருகைக் காவலப்பன் நாதமுனிகளின் அன்பிற்குரிய ஶிஷ்யர்களில் ஒருவர். நாதமுனிகள் காட்டு மன்னார் கோயிலுக்குத் திரும்பிய பின்பு, எம்பெருமானை தியானிப்பதில் காலம் கழித்து வந்தார். அப்பொழுது குருகைக் காவலப்பனை யோக ரஹஸ்யத்தை கற்றுக் கொள்ளப் பணித்து, பின்பு அவரே கற்றும் கொடுத்தார். குருகைக் காவலப்பனும் அதைக் கற்று எம்பெருமானை அஷ்டாங்க யோகத்தில் தியானித்து வந்தார். 

எம்பெருமானின் பிரிவைத் தாங்க முடியாமல் நாதமுனிகள் பரமபதம் அடைந்த பின்னர், குருகைக் காவலப்பன் நாதமுனிகள் தன்  விமல சரம திருமேனி விட்டு பரமபதத்துக்குக் கிளம்பிச் சென்ற இடத்துக்கே சென்றுவிட்டார். அதன் பின் தன் வாழ்நாட்களை எம்பெருமானைத் தியானிப்பதற்கும், அந்த இடத்தை பேணிக் காப்பதற்கும் அர்ப்பணித்தார்.

மணக்கால் நம்பி, ஆளவந்தாரைக் குருகைக் காவலப்பனிடம் சென்று யோக ரஹஸ்யம் கற்றுக் கொள்ளும்படி நியமித்தார். 

ஆளவந்தார் தன்னுடைய ஶிஷ்யர்களுடன் காவலப்பன் எம்பெருமானைத் தியானிக்கும் இடம் வந்தடைந்தார். அப்பனின் யோகத்தை தொந்தரவு செய்ய விருப்பம் இன்றி அவர் அமர்ந்து இருந்த இடத்திற்குப் பின் புறம் இருந்த மதிளின்  பின் மறைந்து அப்பனை பார்த்துக் கொண்டு இருந்தனர். 

திடீர் என்று அப்பன் கண் விழித்துச் சுற்றும் முற்றும் பார்த்தார். “இங்கு சொட்டைக் குலத்தைச் (ஶ்ரேஷ்ட குலம் – நாதமுனிகளுடையது)  சேர்ந்தவர் யார்?” என்று கேட்டார். ஆளவந்தார் வெளிப்பட்டு தான் யமுனைத் துறைவன், நாதமுனிகளின் பேரன் என்று அறிமுகம் செய்து கொண்டார்.

 “நாங்கள் தங்களுக்கு பின் இருந்த மதிளின் பின் பக்கம் மறைந்து இருந்தோமே, தாங்கள் எங்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொண்டீர்கள்” என்று அவர் வினவினார். 

அதற்கு அப்பன், “நான் எம்பெருமானை தியானிக்கும் பொழுது, பெரிய பிராட்டியாரே வந்து அழைத்தால் கூட அவர் திரும்பிப் பார்க்க மாட்டார். ஆனால் இன்று என் தோளை அழுத்தித் தாங்கள் இருந்த பக்கம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அதிலிருந்து அவருக்கு விருப்பமான நாதமுனிகளின் சொட்டை குலத்திலிருந்து ஒருவர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொண்டேன்” என்று கூறினார். 

அப்பனுக்கு பகவானிடத்தில் கிட்டிய அனுபவத்தையும், பகவானுக்கு நாதமுனிகளிடத்தில் இருக்கும் அன்பையும் கண்டு ஆளவந்தார் மனம் நெகிழ்ந்தார். 

அப்பனின் திருவடி பணிந்து தனக்கு யோக ரஹஸ்யம் கற்றுத் தரும்படி வேண்டிக் கொண்டார். அப்பன் அவரை எடுத்து உயர்த்தி, யோக ரஹஸ்யம் கற்றுத் தருவதாக வாக்களித்தார். 

ஆனால், தன் ஸம்ஸார வாழ்வின் இறுதி நாட்களில் தான் அதைக் கற்றுத் தருவேன் என்றார். உயர்ந்த ஞானியாக இருந்தமையால், தாம் பரமபதம் அடையும் நாளை அவர் அறிந்திருந்தார். 

அதை பற்றிய குறிப்பு ஒன்றை ஆளவந்தாருக்குக் கூறி அந்த சமயத்தில் யோக ரஹஸ்யம் கற்க வருமாறு கூறினார். அதற்கு இசைந்து ஆளவந்தார் திருவரங்கம் சென்று, தன் கைங்கர்யத்தைத் தொடர்ந்தார்.

அதன் பின், ஸ்ரீரங்கம் அத்யயன உத்சவத்தில் ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை நம்பெருமாள் திருமுன்பு தாளமிசைத்துப் பாடுகிறார்.

 அவர் திருவனந்தபுரம் – கெடுமிடர் (10.2) பதிகத்தில் “நடமினோ நமர்களுள்ளீர் நாமுமக்கு அறியச் சொன்னோம்” என்ற பாசுரத்தை ஆளவந்தாரை நோக்கியபடிப் பாட (பக்தர்களே, உடனே திருவனந்தபுரம் நோக்கி புறப்படுங்கள்), ஆளவந்தாரும், அதை நம்பெருமாளின் கட்டளையாக ஏற்றுக் கொண்டு,  உடனே திருவனந்தபுரம் சென்றார். 

அங்கே மங்களாஶாஸனம் செய்த பின் தான், அப்பன் தன்னை யோக ரஹஸ்யம் கற்றுக் கொள்ள வரச்  சொன்ன நாள் அன்று தான் என்று ஆளவந்தாருக்கு நினைவுக்கு வந்தது. தன்னிடம் உடனே பறந்து செல்ல புஷ்பக விமானம் இல்லையே என்று வருந்தினார்.

இவ்வாறு அப்பன் தன் ஆசார்யன் ஸம்ஸாரம் துறந்த இடத்திலேயே எம்பெருமானை தியானித்துக் கொண்டு இருந்து, இறுதியில் நாதமுனிகள் திருவடியைச் சென்று அடைந்தார்.

நாமும் குருகைக் காவலப்பனின்  திருவடி வணங்கி எம்பெருமான் மற்றும் ஆசார்யனின் பேரன்பைப் ப்ரார்த்திப்போம்." Quote ends.

Kurugai kavalappan Thaniyan

நாதமுனி  பதாஸக்தம்

ஜ்ஞானயோகாதி ஸம்பதம்

குருகாதிப யோகீந்த்ரம் 

நமாமி ஶிரஸா ஸதா 

Vazhi Thirunam

மகரத்தில் விசாக நாள் வந்துதித்தான் வாழியே 

மாறன் தாள் நாதமுனி மலரடியோன் வாழியே 

நிகரில் நல்ஞான யோகம் நீண்டு செய்வோன் வாழியே 

நிர்ணயமாய் ஐந்து பொருள் நிலை அறிவோன்  வாழியே 

அகமருக்கும் ராமர் பதம் ஆசை உள்ளோன் வாழியே 

ஆழவார்கள் மறை அதனை ஆய்ந்துரைப்போன் வாழியே 

செகதலத்தில் குருகுரில் செனித்த வள்ளல் வாழியே 

செய்ய குருகைக் காவலப்பன் திருவடிகள் வாழியே 


திருநக்ஷத்ரம்தை விசாகம்

அவதார ஸ்தலம்ஆழ்வார்திருநகரி


குருகைக் காவலப்பனுக்கு ஒரு

கோயில் உள்ளது.

ஊர்: கங்கைகொண்ட சோழபுரம் 

Distance from Kumbakonam  35 km

Temple Timings

7 am to 11 am  5 pm to 7.30 pm

 Contact:

Rangaraja Bhattar       98403 69793

Rajamani Bhattar         80723 28426

Asokan (temple office)  999489 57495

திரு சாரதி T , மேலும் பல ஆச்சார்யர்களை பற்றியும், அவர்களை தனியன் மற்றும் வாழி திருநாமங்களையும் எழுதி இருக்கிறார். இதேபோல், "இவரோ தெரியுமா" என்ற தொடரில், நான் பகிர்ந்துகொள்கிறேன். 

Source

https://guruparamparaitamil.wordpress.com/2015/12/16/kurugai-kavalappan/

 Temple Image credit goesto

https://wanderingtamil.blogspot.com/2017/11/kurugai-kavalappar-temple.html

 

Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக