சனி, 11 மார்ச், 2017

ராமர் ஹநுமானிடம் பட்ட கடன்.


வால்மீகி இராமாயணத்தில், ராமர் பட்டாபிகேஷம் முடிந்ததும், வானர தலைவர்களை, அவரவர் தகுதிக்கேற்ப பரிசுகள் கொடுத்து திருப்பி அனுப்பும் நிகழ்வை நேற்று உத்தர காண்டத்தில் படித்தேன்.

அதில், ராமர், ஹநுமானை விடை கொடுத்து அனுப்பும்போது, மிகச்சிறந்த ஆபரணங்களை பரிசளித்து விட்டு, பின்வருமாறு கூறுகிறார்.
"வாநரனே! நீ செய்த உதவிகளில் ஒரே ஒன்றுக்காகவேகூட , நான் உயிரை தியாகம் செய்வேன். அப்படி செய்தாலும் மற்ற உபகாரங்களுக்காக நான் உன்னிடம் கடன்பட்டவனாகவே இருப்பேன். 

வானரத்திலகமே! நீ எனக்கு செய்த உதவிகள் எல்லாம் எனக்குள்ளேயே ஜீரணமாகிப் போகட்டும். உன் உதவிகளுக்கு நண்றி செலுத்தும் வகையில், நான் உனக்கு உதவி செய்யும் நிலை எனக்கு ஏற்படவேண்டாம்.
நான் கடன் பட்டவனாகவே இருந்து விடுகிறேன். 

ஏனென்றால், ஒருவன் செய்த உதவிக்கு, பதில் உதவி செய்யும் வாய்ப்பு, அவனுக்கு, கஷ்டம் வந்தால்தான் ஏற்படும். உனக்கு கஷ்டமும் வர வேண்டாம்; அதை போக்குவதற்கு நான் உதவி செய்யவும் வேண்டாம்."


அரக்க மன்னனும் , வானர வீரர்களும் ராமனிடம் விடை பெற்று பிரிந்து செல்லும் நிகழ்ச்சியை  படிக்கும்போதே கண்ணீர் தளும்பும்.

மேலும், உத்தர காண்டம் சர்கம்  35, 36 ல் , ஹனுமானின் பிறப்பு மற்றும், அவர் பெற்ற  வரன்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.  அதை படித்தால் தான் ஆஞ்சநேயரின் மகிமை துல்லியமாக விளங்கும்.



Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக