வால்மீகி ராமாயணம் படித்துக்கொண்டு வருகிறேன். சில சுவாரஸ்யமான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்துகொள்கிறேன்.
பாற்கடல் கடையும்போது தோன்றியவர்கள்
1. அப்சரஸ் -- தண்ணீரின் (அப்பு) சாரத்திலிருந்து தோன்றியதால் அப்சரஸ் என்று பெயர்
2. வருணனின் மகள் வாருணி தோன்றினாள். இன்னொரு பெயர் சுரா. இவளை திதியின் புதல்வர்கள் (தைத்யரக்ள்) ஏற்க மறுத்தனர். ஆதலால் அவர்களுக்கு அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். அதிதியின் புதல்வர்கள் வாருணியை ஏற்றுக்கொண்டதால் அவர்கள் சுரர் என்று அழைக்கப்பட்டனர்.
3. தன்வந்தரி பகவானும், பாற்கடலில் இருந்து தோன்றியவர்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக