திங்கள், 12 ஆகஸ்ட், 2024

இவரைத் தெரியுமா _ பிரதிவாதி பயங்கரம் அண்ணா.

 


திருநக்ஷத்ரம்: ஆடிமாதம்  பூசம் நக்ஷத்திரம் 

அவதார ஸ்தலம்: திருத்தண்கா, காஞ்சிபுரம் 

ஆசார்யன்: மணவாள மாமுனிகள்

மனவள மாமுனிகள் அஷ்ட  திக்கஜங்களில் பிரதானமானவர்  

பார்ப்பதற்கு கண்டிப்பாகப் பயங்கரமாக இல்லை. இருந்தாலும், அவருடைய தமிழ், ஸம்ஸ்க்ருதம், மற்றும் தெலுங்கு மொழிகளில் அவர்க்கு இருந்த பாண்டித்யம், கற்பனைக்கு  எட்டாத ஆச்சர்யம். 

நாம் சாதாரணமாக  "அவர் பயங்கரமானவர்" என்று வியந்து சொல்வோம் இல்லையா? அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். 

வாதத்திறமையில் அபார திறமை பெற்றிருந்தார். அதனாலும் இவர்  ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா என்று அழைக்கப்பட்டார். 

இந்த மஹாசார்யரின் அருளிச்செயல்களை பாருங்கள். 

ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம், ஸ்தோத்ரம்- இதை நாம் எல்லோரும் அறிவோம் 

ஸ்ரீ வெங்கடேஸ்வர ப்ரபத்தி ஸ்லோகம் (இதை நாம் எல்லோரும் அறிவோம்_

ஸ்ரீ வெங்கடேச மங்களம் 

அஷ்டஸ்லோகி வ்யாக்யானம் 

வரவர முனி  மங்களம் 

* varavara muni சதகம் 

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனின் தனியன் :

வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோபயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்

வாழித் திருநாமம்.

மன்னு புகழ் மணவாள மாமுனிக்கு அன்பன் வாழியே 

மாறன் சடகோபன் மொழி வழுவாதான் வாழியே 

அன்றையிலும் அடைத்தவர் பால் அருளுடையோன் வாழியே 

அடைவுடனே வேதாந்தம் அறிந்துரைத்தோன் வாழியே   

என்னையும் தன இன்னருளால் எடுத்தளித்தான் வாழியே 

இரண்டுலகும் தன புகழை ஏத்துமவன் வாழியே 

பன்னு காலை ஆழவார்கள் பதமுடையோன் வாழியே 

பிரதிவாதி பயங்கரனார் பதியில்  என்றும் வாழியே 


இவர் எவ்வாறு திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கம் பெருமாள்களுக்கு பிரியமானவராக ஆனார்  என்பதை  அறிந்தால், இவர் இப்பேர்ப்பட்ட ஸ்ரீவைஷ்ணவ மஹாசார்யரா, என்று வியந்து, அவரை அடிபணிவீர்கள். 

Click this link to read all about him.

https://guruparamparaitamil.wordpress.com/2016/02/01/prathivadhi-bhayankaram-annan/

Follow Me on Pinterest

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

பாவம் என்பது எவை?

 


தர்மத்திற்கு புறம்பான செயல் என்றால் எந்தெந்த செயல்கள் அதிலே அடங்கும்?

அல்லது 

பாவம்  என்பது எவை?

சுருக்கமாக அதே சமயம் எளிதாகச் சொல்லவேண்டுமானால், நம்முடைய எண்ணங்களோ, வாக்கோ, செயலோ, கடவுளின் முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்தால், அது புண்ணியம். அவர் முகம் சுளித்தால், அது பாபம். 

 

Follow Me on Pinterest

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

சாத்விகத் தியாகம் என்பது என்ன எப்படி செய்யவேண்டும்.

                     
                          ஸ்ரீமத் நிகமாந்த மஹாதேசிகன் 

சாத்விகத்  தியாகம்  என்பது என்ன? எப்படி செய்ய வேண்டும்?

சித்ரகுப்தன்  -இதுவரை பற்றி நாம் எல்லோரும் கேள்விப்பட்டிடுக்கிறோம். அவர், தர்மதேவதை என்று அறியப்படும் Mr. எமனின் உதவியாளர். அவருடைய கணக்கு புத்தகத்தில் ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் ஒரு ஏடு (folio) உண்டு. 

அந்தப்புத்தகத்தில் நம்முடைய பாவபுண்ணியங்களின் கணக்கு இருக்கும். கண்டிப்பாகப் பாவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதற்க்கு ஏற்றபடி நமது நரக  வேதனை அமையும். 

ஒருவேளை புண்ணியங்களின் எண்ணிக்கை சற்றே தூக்கலாக இருந்தால், ஸ்வர்கத்திற்க்கோ அல்லது சுகங்களை அனுபவிப்பதற்கு ஏற்ற வேறு லோகத்திற்க்கோ அனுப்பப்படுவோம். 

ஒருவேளை பாவபுண்ணியங்களின் கணக்கு பூஜ்யத்தை அடைந்திருந்தால், அந்த ஜீவாத்மாவை, விஷ்ணு தூதர்கள் வந்து, மிக்க மரியாதையுடன் வைகுண்டர்திக்கு அழைத்துச் செல்வார்கள். 

இந்தக் கடைசி option சாத்யமாவதற்கு நாம், தினமும் செய்யும் கர்மங்களை பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். ஆனால், ஒவ்வொரு செயலை ஆற்றுவதற்கு, முன், நாம் நினைவில் வைத்துக்கொண்டு "சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து" சொல்ல இயலாது. 


அதற்க்கு இதோ ஒரு வழி. அதுதான் சாத்விக தாயகம் செய்துவிடுவது. கீழே கொடுத்துள்ள ஸ்லோகத்தை ஒவ்வொரு நாள் காலை எழுந்தவுடன் சொல்லிவிட வேண்டும். 

பிறகு அன்று முழுவதும் தர்மத்திற்கு புறம்பான கர்மங்களை  மனத்தால் நினைக்கவுவோ, வாக்கால் சொல்லவோ, சரீரத்தால் செய்யவோ கூடாது 

"பகவானேவ, ஸ்வனியம்ய, ஸ்வசேஷபூதேனமயா,  ஸ்வஆராதனைக ப்ரயோஜனாய, ஸ்வஸ்மை, ஸ்வப்ரீதையே, ஸர்வசேஷி, பரமபுருஷஹ, ஸ்ரீயப்பதி, ஸ்வயமேவ, காரயிதி."

கொஞ்சூண்டு sanskrito அல்லது ஹிந்தியோ தெரிந்திருந்தால், உங்களளுக்கு இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் சற்றே விளங்கும். 

முடிந்தால் ஸ்ரீமத் நிகமாந்த மஹாதேசிகனின் "ந்யாஸ தசகம்" என்ற பத்தே பத்து ஸ்லோகங்களை கொண்ட கிரந்தத்தை தினமும் வாசியுங்கள். 

இலவசமாகக் கிடைக்குமிடம் https://prapatti.com/slokas/tamil/desika-stotramaala/nyaasadashakam.pdf 


Follow Me on Pinterest