திங்கள், 22 ஜூலை, 2024

இவரை தெரியுமா_ வடுக நம்பி

 


வடுக நம்பியின் இயற்பெயர்  ஆந்திர பூர்ணர்.

வடுக நம்பி -ராமானுஜரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவ.இவரின் ஆச்சார்ய நிஷ்ட்டையை கூரத்தாழ்வானுக்கும்,  மூங்கில்குடியமுதனார்க்கும் ஒப்பிடுவார்கள்.

இவரின் அவதாரஸ்தலம்   சாலிகிராமம் என்னும் சிறு கிராமம். இது மைசூரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது. 

திருநக்ஷத்திரம்  சித்திர மாதம்  அஸ்வினி 

நீங்கள் இவரைப்பற்றி படிக்கும்போது, இவருடைய கோவிலுக்கு சென்று சேவிக்க வேண்டும் என்று கட்டாயம் தோன்றும்.

வடுக நம்பி ஒரு சில கிரந்தங்களை இயற்றியுள்ளார். 

* ராமானுஜ அஷ்டோத்ர சாதநாம ஸ்தோத்ரம் 

* ஈமானுஜ அஷ்டோத்ர சத நாமாவளி 

* ராமானுஜ வைபவம் 

 இவர் எவ்வாறு ராமானுஜரின் சீடர் ஆனார் ?

இவருடைய ஆச்சர்ய பக்தியின் சிறப்பு அம்சங்கள் எனனென்ன?

5 முக்கிய சம்பவங்கள் இவர்  ராமாநுஜரிடம் கொண்ட  ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தும். 

அவை எவை?

இங்கே படியுங்கள்.

https://guruparamparaitamil.wordpress.com/2016/07/08/vaduga-nambi/

நிச்சயமாக , நாமும் இவருடைய சம்பந்தம் பெற்றால், உயர்ந்த கதியை அடைவோம் என்பதில், சிறிதளவும் சந்தேகம் இல்லை.


வடுக நம்பியின் தனியன்

1. ராமானுஜார்ய ஸச்சிஷ்யம், ஸாளக்ராம நிவாஸிநம்

பஞ்சமோபாய ஸம்பந்நம், ஸாளக்ராமார்யம் ஆச்ரயே


2. ஸ்ரீ ராமானுஜ யோகீந்த்ர ஷீரகைங்கர்ய ஸாலினே 

நமோ வடுக பூர்ணாய மஹநீய குணாப்பதையே 


வாழி திருநாமங்கள் 

1. சித்திரையில் அஸ்வினியின் சிறப்புடன் பிறந்தான்வாழியே 

மிதுன சாலிக்ராம நகரத்தை வாழ்வித்தான் வாழியே 

அத்திகிரி அடிபணிந்தவரிடம் காதலுற்றான் வாழியே 

ஆசார்யன் அன்றி வேறு தெய்வம் அறியாதவன் வாழியே 

முக்தி அடைய ஆசார்யன் பாதமே கதி என்றான் வாழியே 

பால் பொங்கிவிடும் என்று அரங்கனையே வெறுத்தான் வாழியே 

யதிராசர் மிக அருள்பெற்று உணர்ந்தோன் வாழியே 

வடுகநம்பி திருவடிகள் ஊழிதோறூழி வாழியே 


2. ஏராறும் சித்திரையில் அசுவதி வந்தான் வாழியே 

எழில் சாளக்ராம நகரத்தில் அவதரித்தான் வாழியே 

சரம பர்வ நிஷ்டையில் ஊன்றி நின்றான் வாழியே 

எம்பெருமானாரே தெய்வம் என்று அனுஷ்டித்தான் வாழியே 

அநவரதம் ஆச்சார்ய கைங்கர்யமே பொழுது போக்கும் என்றான் வாழியே 

ஆசார்யனை அல்லாது வேறு தெய்வம் அறியான் வாழியே 

ச்வாச்சார்யர அஷ்டோத்ர சதநாமங்களை அருளினான்  வாழியே 
ஸ்ரீராமானுஜர் வைபவமே நிரந்தரம் அனுசந்திதான் வாழியே 
ஆச்சார்ய பாத தீர்த்தமே பரம போக்யம் என்று எண்ணினான் வாழியே 
ஸ்ரீ வடுக நம்பி திருவடிகள் வாழி வாழி வாழியே 


ஆர்த்தி பிரபந்தத்தில் மனவள மாமுனிகள் 

உன்னையொழிய ஒரு தெய்வம் மற்றறியா மன்னுபுகழ்சேர் வடுக நம்பி - தன்னிலையை என்றனக்கு நீ தந்தெதிராச என்னாளும் உன்றனக்கெ ஆட்கொள் உகந்து.

Vaazhithirunaama credit goes to http://acharya.org/sloka/vtn/vn-vt-ta.pdf

image credit goes to https://www.youtube.com/watch?app=desktop&v=zTlRyOomiKM



Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக