Thursday, October 19, 2023

மரணம் என்பது கடவுளின் அனுக்கிரஹம்.

 ஸ்ரீமத் பாகவதத்தில் , முதல் ஸ்கந்தம் 6 வது  அத்யாயம், பத்தாவது சுலோகம்.

Skandham 1  Chapter 6  Slogam 10



வால்மீகி முனிவர் நாரதரிடம், அவரது வாழ்க்கை வரலாறை கேட்கிறார்.  நாரதர் பதில்  கூறுகையில் , தான் முந்தைய கல்பத்தில் , சிறுவனாக இருக்கும்பொழுது, சில முனிவர்களிடம்  தொண்டு செய்து  வாழ்ந்து வருகிறார்.

ஒரு நாள், அவரது எ அன்னை பாம்பு கடித்து இறந்து விடுகிறார். நாரதர், அதை ,பகவத் அனுக்கிரஹம் என்று எண்ணி, வடக்கு நோக்கி, தவம் புரிய சென்று விடுகிறார்.


மரணம் என்பது தண்டனை அல்ல. மரணம் என்பது விடுதலை. இவ்வாறுதான் எனக்குப் புரிகிறது. 



Follow Me on Pinterest

Saturday, July 1, 2023

வாதிகேசரி அழகிய மனவள ஜீயர் பற்றி சில அரிய தகவல்கள்.

 


நேற்று, திரு வேளுக்குடி ரங்கநாதன் ஸ்வாமிகளின் மூன்று மஹான்களின் திருநக்ஷரத்தையும், ப்ரபாவத்தையும் பற்றிய உரை கேட்டேன். 

அதிலிருந்து, சில இதுவரையிலும் அறியாத தகவல்களை அறிந்துகொண்டேன். அவைகளை இங்கே பகிர்கிறேன். 

* வடக்கு திருவீதிப்பிள்ளையின் திருநாமமும், பெரியவச்சன் பிள்ளைகளின் திருநாமமும் ஒன்றே. கிருஷ்ணன்  அவர்களின் இயற்பெயர். 

* இருவரும் சமகாலத்தவர்கள். 

* இருவரும்  நம்பிள்ளையின் சிஷ்யர்கள். அடையாளம் தெரிவதற்க்காக  அவர்களுக்கு அந்த பட்டப்பெயர்கள் வழங்கப்பட்டது.

* வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர், அவதாரம்,  அம்பாசமுத்திரம் அருகில் உள்ள மன்னார்கோவில் என்ற சிற்றூர்.  இவர் பெரியவாச்சான் பிள்ளையின் சீடராக இருந்தவர். தனது 32 வயது வரை படிக்காமல் இருந்தவர். ஆனால், தனது ஆச்சாரியாருக்கு, மிகுந்த தொண்டு புரிந்துகொண்டு வாழ்ந்தார்.  பின்னர், ஆச்சார்யரின் அருளால், பெரிய பண்டிதர் ஆனார்.  

* நாயனார் ஆச்சான் பிள்ளை என்பவர், பெரியவச்சன் பிள்ளையின் திருக்குமாரர்.. பெரியவாச்சான் பிள்ளை காலத்திற்கு பிறகு, இவர்தான், ஆச்சார்யர் ஆனார்.

* இவர் இயற்றிய கிரந்தங்கள் பின்வருமாறு.

1. பன்னீராயிரப்படி என்ற திருவாய்மொழி வ்யாக்யானம். இது மிக உபயோகமான பதபதார்த்தங்களின் முறையில் இயற்றிய வ்யாக்யானம்.

2. இதற்கு முன், நால்வர்  திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் அருளிச்செய்துள்ளார்கள். திருக்குருகைப்பிரான் பிள்ளான், நஞ்சீயர், வடக்கு திருவீதிப்பிள்ளை (ஈடு முப்பத்தி ஆறாயிரப்படி), பெரியவாசிச்சான் பிள்ளை ஆகியோர்.

3. க்ரந்தோபினிஷத் சங்கதி 

4. ரஹஸ்யத்ரேய விவரணம் 

5. பகவத் கீதை வெண்பா (கீதையின் 700 ஸ்லோகங்கள் வெண்பா முறையில் தமிழில்)

6. தத்வ தீபம் 

7. தீப ப்ரசாதிகா  

8. தத்வ நிரூபணம் 

9. தத்வ பூஷணம் 

10. தீப சங்கிரகம் 

* இவருடைய சிஷ்யர்தான், திருமாலையாண்டான் 


ps பிழைகளை சுட்டிக்காட்ட தயங்கவேண்டாம்.

திரு வேளுக்குடி  ரங்கநாதன் ஸ்வாமிகளுக்கு மிக்க நன்றி.

Image credit: https://guruparamparai.files.wordpress.com/2013/03/vadhi-kesari-azhagiya-manavala-jiyar.jpg


Follow Me on Pinterest

ஸ்ரீமன் நாதமுனிகள் திருவடிகளே சரணம்.

 



அடியேனுக்கு எப்போதும் ஆழவார்கள் மற்றும் ஆச்சார்யர்களின் ப்ரபாவத்தை கேட்பது மிகவும் பிடிக்கும். அவர்களின் திருநக்ஷத்ரம் மேலும் அவர்களின் அவதார தினங்களை குறித்து வைத்துக்கொண்டு, அவரகள் இயற்றிய பாசுரங்கள், கிரந்தங்கள் இவற்றை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு.

இந்த வாரத்தில, ஸ்ரீ சுதர்ஸன ஆழ்வார் (ஆணி மாதம் சித்திரை நக்ஷத்திரம்) பெரியாழ்வார், வடக்கு திருவீதிப்பிள்ளை, மற்றும் அழகிய மணவாள ஜீயர் இவர்களின் திருநக்ஷத்திரம் ஆனி ஸ்வாதி, கொண்டாடப்பட்டது. 

ஆனால் அடியேன் அன்றன்றைய நாட்களின் இறுதியில்தான் தெரிந்துகொண்டேன். மிக்க வருந்தினேன். இவர்ளின் அருளிச்ச்செயலையோ, கிரந்தங்களையோ, வ்யாக்யானங்களையோ வாசிக்க/கேட்க  முடியவில்லை என்று வருந்தினேன.

மேலும் இன்று திரு நாதமுனிகளின் ஆனி அனுஷம் என்று அறிந்துகொண்டு, இம்மஹாசார்யரின் வாழி திருநாமத்தையாவது சொல்ல இருக்கிறேன். 

இவரின் முயற்சி இல்லையென்றால், நாம் திவ்யப்ரபந்தங்களளை அறியாமல், இருட்டில் வாழ்ந்துகொண்டு இருப்போம். இதை நினைத்தாலே கண்கள் கலங்குகிறது. 

உங்களில் யாருக்காவது, நமது ஆழவார்கள் மற்றும் ஆச்சாயர்களின் (குரு பரம்பரை)  அவதார ஸ்தலமும் அவதார திருநக்ஷத்திரங்களும் தெரியுமென்றால், தயவு செய்து கமெண்ட் மூலம் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

Image courtesy: https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSsv-8LPaHo-pgaymE-XxxAXp3niIsrdwGDUw&usqp=CAU

Follow Me on Pinterest