அடியேனுக்கு எப்போதும் ஆழவார்கள் மற்றும் ஆச்சார்யர்களின் ப்ரபாவத்தை கேட்பது மிகவும் பிடிக்கும். அவர்களின் திருநக்ஷத்ரம் மேலும் அவர்களின் அவதார தினங்களை குறித்து வைத்துக்கொண்டு, அவரகள் இயற்றிய பாசுரங்கள், கிரந்தங்கள் இவற்றை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு.
இந்த வாரத்தில, ஸ்ரீ சுதர்ஸன ஆழ்வார் (ஆணி மாதம் சித்திரை நக்ஷத்திரம்) பெரியாழ்வார், வடக்கு திருவீதிப்பிள்ளை, மற்றும் அழகிய மணவாள ஜீயர் இவர்களின் திருநக்ஷத்திரம் ஆனி ஸ்வாதி, கொண்டாடப்பட்டது.
ஆனால் அடியேன் அன்றன்றைய நாட்களின் இறுதியில்தான் தெரிந்துகொண்டேன். மிக்க வருந்தினேன். இவர்ளின் அருளிச்ச்செயலையோ, கிரந்தங்களையோ, வ்யாக்யானங்களையோ வாசிக்க/கேட்க முடியவில்லை என்று வருந்தினேன.
மேலும் இன்று திரு நாதமுனிகளின் ஆனி அனுஷம் என்று அறிந்துகொண்டு, இம்மஹாசார்யரின் வாழி திருநாமத்தையாவது சொல்ல இருக்கிறேன்.
இவரின் முயற்சி இல்லையென்றால், நாம் திவ்யப்ரபந்தங்களளை அறியாமல், இருட்டில் வாழ்ந்துகொண்டு இருப்போம். இதை நினைத்தாலே கண்கள் கலங்குகிறது.
உங்களில் யாருக்காவது, நமது ஆழவார்கள் மற்றும் ஆச்சாயர்களின் (குரு பரம்பரை) அவதார ஸ்தலமும் அவதார திருநக்ஷத்திரங்களும் தெரியுமென்றால், தயவு செய்து கமெண்ட் மூலம் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
Image courtesy: https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSsv-8LPaHo-pgaymE-XxxAXp3niIsrdwGDUw&usqp=CAU
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக