சனி, 1 ஜூலை, 2023

வாதிகேசரி அழகிய மனவள ஜீயர் பற்றி சில அரிய தகவல்கள்.

 


நேற்று, திரு வேளுக்குடி ரங்கநாதன் ஸ்வாமிகளின் மூன்று மஹான்களின் திருநக்ஷரத்தையும், ப்ரபாவத்தையும் பற்றிய உரை கேட்டேன். 

அதிலிருந்து, சில இதுவரையிலும் அறியாத தகவல்களை அறிந்துகொண்டேன். அவைகளை இங்கே பகிர்கிறேன். 

* வடக்கு திருவீதிப்பிள்ளையின் திருநாமமும், பெரியவச்சன் பிள்ளைகளின் திருநாமமும் ஒன்றே. கிருஷ்ணன்  அவர்களின் இயற்பெயர். 

* இருவரும் சமகாலத்தவர்கள். 

* இருவரும்  நம்பிள்ளையின் சிஷ்யர்கள். அடையாளம் தெரிவதற்க்காக  அவர்களுக்கு அந்த பட்டப்பெயர்கள் வழங்கப்பட்டது.

* வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர், அவதாரம்,  அம்பாசமுத்திரம் அருகில் உள்ள மன்னார்கோவில் என்ற சிற்றூர்.  இவர் பெரியவாச்சான் பிள்ளையின் சீடராக இருந்தவர். தனது 32 வயது வரை படிக்காமல் இருந்தவர். ஆனால், தனது ஆச்சாரியாருக்கு, மிகுந்த தொண்டு புரிந்துகொண்டு வாழ்ந்தார்.  பின்னர், ஆச்சார்யரின் அருளால், பெரிய பண்டிதர் ஆனார்.  

* நாயனார் ஆச்சான் பிள்ளை என்பவர், பெரியவச்சன் பிள்ளையின் திருக்குமாரர்.. பெரியவாச்சான் பிள்ளை காலத்திற்கு பிறகு, இவர்தான், ஆச்சார்யர் ஆனார்.

* இவர் இயற்றிய கிரந்தங்கள் பின்வருமாறு.

1. பன்னீராயிரப்படி என்ற திருவாய்மொழி வ்யாக்யானம். இது மிக உபயோகமான பதபதார்த்தங்களின் முறையில் இயற்றிய வ்யாக்யானம்.

2. இதற்கு முன், நால்வர்  திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் அருளிச்செய்துள்ளார்கள். திருக்குருகைப்பிரான் பிள்ளான், நஞ்சீயர், வடக்கு திருவீதிப்பிள்ளை (ஈடு முப்பத்தி ஆறாயிரப்படி), பெரியவாசிச்சான் பிள்ளை ஆகியோர்.

3. க்ரந்தோபினிஷத் சங்கதி 

4. ரஹஸ்யத்ரேய விவரணம் 

5. பகவத் கீதை வெண்பா (கீதையின் 700 ஸ்லோகங்கள் வெண்பா முறையில் தமிழில்)

6. தத்வ தீபம் 

7. தீப ப்ரசாதிகா  

8. தத்வ நிரூபணம் 

9. தத்வ பூஷணம் 

10. தீப சங்கிரகம் 

* இவருடைய சிஷ்யர்தான், திருமாலையாண்டான் 


ps பிழைகளை சுட்டிக்காட்ட தயங்கவேண்டாம்.

திரு வேளுக்குடி  ரங்கநாதன் ஸ்வாமிகளுக்கு மிக்க நன்றி.

Image credit: https://guruparamparai.files.wordpress.com/2013/03/vadhi-kesari-azhagiya-manavala-jiyar.jpg


Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக