Saturday, July 3, 2010

Pillai Lokacharyar.


பிள்ளை லோகாச்சர்யர் -இவர் மொத்தம் 18 கிரந்தங்களை இயற்றியவர்.
இவர் உண்மையில் காஞ்சி தேவபெருமாளின் அவதாரம்.

பிள்ளை லோகாச்ரயரின் தகப்பனார் வடக்கு திருவீதிப்பிள்ளை. இவர் நம்பிள்ளையின் சீடர்.

பிள்ளை லோகாச்சர்யர் அவதார வருஷம் 1205 AD
மோக்ஷ ப்ராப்தி அடைந்த வருஷம் 1311 AD

பிள்ளை லோகாச்ரயரின் அவதார ரகசியம் :
காஞ்சி தேவபெருமாள் ஒரு சமயம் மணர்பாக்கம் நம்பி என்றவரின் கனவில் தோன்றி சில முக்கியமான, உயர்ந்த ரகஸ்யங்களை அருளிவிட்டு சென்றதாவகவும், ஸ்ரீரங்கன் போய் வசிக்க வேண்டும் என்றும், பின்னொருநாள் தானே வந்து மேலும் சில அர்த்தங்களை விளக்குவதாகவும் கூறி விட்டு மறைந்தார்.

மணர்பாக்கம் நம்பியும் ஸ்ரீரங்கம் வந்தடைந்து ஒரு சிறு கோவிலை நிர்மாணித்து வழிபட்டு வந்தரர். ஒரு நாள், அந்த சிறு கோவிலுக்கு பிள்ளை லோகாச்சர்யர் தமது சிஷ்யர்களுடன் வழிபட வந்தார்.

அப்பொழுது, பிள்ளை லோகாசார்யர் தமது சிஷ்யர்களுக்கு உபதேசித்த சில ரஹஸ்யங்கள், மணர்பாக்கம் நம்பிகளின் காதில் விழுந்தன. இதுதான் காஞ்சி தேவப்பெருமாள் தனக்கு உபதேசித்த விஷயங்கள் என்று தெரிந்துகொண்டார்.

உடனே அவர் பிள்ளை லோகாச்சரயரிடம், "அவரோ நீர்?" என்று கேட்டார். பிள்ளை லோகாசார்யரும் "ஆம்" என்று விடையளித்தார். அன்று முதல், மணர்பாக்கம் நம்பிகள் பிள்ளை லோகாசார்யரின் சீடர்ஆனார்.


பின்னொரு சமயம், முகமதியர்கள் ஸ்ரீரங்கம் கோவிலை கொள்ளையடிக்க வந்தனர். இதை கேள்விப்பட்ட பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளின் சந்நிதியை செங்கல் சுவர் கட்டி மறைத்துவிட்டு, வேறு ஒரு விக்ரஹத்தை, சுவரின் முன்னே வைத்துவிட்டு, நம்பெருமாளின் (உற்சவர்) விக்ரஹத்தை தூக்கிக்கொண்டு காட்டு வழியே தன சிஷ்யர்களுடன் ஓடினார்.

விழியில் திருடர்களிடம் அகப்பட்டுக்கொண்டு, நம்பெருமாளின் ஆபரணங்கள் அனைத்தையும் பறிகொடுத்தார். அதிர்ஷ்டவசமாக திருடர்கள் நம்பெருமாளை மட்டும் பிள்ளை லோகாசார்யரிடமே விட்டுவிட்டு சென்றார்கள்.

பின், அவர், தன சிஷ்யர்களுடனும், நம்பெருமாளின் விகரஹத்துடனும், ஜ்யோதிஷ்குடி என்ற கிராமத்தை அடைந்து, உடல் நலம் குன்றியதால், அங்கேயே மோக்ஷம்அடைந்தார்.

பிள்ளை லோகாசார்யரின் படைப்புகள்
    1. முமுக்ஷுப்படி
    2. யாத்ருச்சிகப்படி
    3. ஸ்ரியப்பதிப்படி
    4. பரந்தபடி
    5. தனி சரமம்
    6. தனி த்வயம்
    7. தனி பிரணவம்
    8. ஸ்ரீ வசன பூஷணம்
    9. அர்த்த பஞ்சகம்
    10. தத்வ சேகரம்
    11. தத்வ த்ரயம்
    12. அர்ச்சிராதி
    13. பிரமேய சேகரம் -வியாக்யானம்
    14. நவவித சம்பந்தம்
    15. பிரபன்ன பரித்ரணம் - வியாக்யானம்
    16. சாரா சங்க்ரகம்
    17. நவரத்ன மாலை- வியாக்யானம்
    18. சம்சார சாம்ராஜ்யம்
  • கத்யத்ரேய வியாக்யானம்
Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

No comments:

Post a Comment