அடியேன் தற்பொழுது பராசர பட்டரின் ரங்கராஜ ஸ்தவம் உபன்யாசம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் அவர்களின் வ்யக்கயனம் அடியேனை பிரமிக்க வைக்கிறது.
127 ஸ்லோகங்கள் கொண்டது ரங்கராஜ ஸ்தவம். அதில் சுலோகம் 13 இல் இருந்து தொடங்கி சுலோகம் 17 வரை மிக உயர்ந்த கற்பனையுடன் இயற்றி இருக்கிறார் பராசர பட்டர்.
குறிப்பாக இந்த 13 வது ஸ்லோகத்தை கேட்டவுடன், அடியேனின் கண்கள் கலங்கிவிட்டன.
அமதம் மதம் மதமாத மதம் ஸ்துதம்
பரிநிந்தம் ஸ்பவதி நிந்திதம் ஸ்துதம்
இதன் அர்த்தத்தை நீங்கள் ஒரு முறை கேட்டீர்களானால், பிரமித்து விடுவீர்கள். அப்பா, எத்தனை உயர்ந்த கற்பனை!
வேதங்களை பிரமாணமாகக்கொண்டும், பிரபந்தகளை பிரமாணமாகக்கொண்டும், வெகு சிறப்பாக உபதேசித்தார் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்.
ரங்கராஜ ஸ்தவம்-ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் கண்ண்டிப்பாக கேட்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக