ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசத்தில் இருந்து அடியேன் அறிந்தவை மற்றும் ஆங்காங்கே கண்டதும், கேட்டதும், படித்ததும்
செவ்வாய், 20 ஜூலை, 2010
ஸ்ரீரங்கத்தில் உள்ள சந்திர புஷ்கரணியை சுற்றி இருக்கும் 8 தீர்த்தங்கள்
ஸ்ரீரங்கத்தில் உள்ள சந்திர புஷ்கரணியை சுற்றி இருக்கும் 8 தீர்த்தங்கள்.
* கிழக்கே பில்வ தீர்த்தம். இதில் சுக்ராச்சார்யார் தீர்த்தமாடி சாப விமோசனம் அடைந்தார். இந்த தீர்த்தம், எல்லை கரையில் உள்ளது. மங்கம்மாள் இடம் என்றும் சொல்வார்கள்.
* தென் கிழக்கே ஜம்பு தீர்த்தம். சிவபெருமானுக்கு சாப விமோசனம் கொடுத்த தீர்த்தம்.
* தெற்கே அஸ்வத்த தீர்த்தம். இந்திரன் சாப விமோசனம் பெற்ற தீர்த்தம்.
* தென்மேற்கே பலாச தீர்த்தம். இது ஜீயபுரத்தில் உள்ளது.
* மேற்கே புன்னாக தீர்த்தம். மேலூரில் உள்ளது. அக்னி பகவானுக்கு சாபம் தீர்த்த இடம்.
* அடுத்தது, வகுள தீர்த்தம். குணசீலம் போகிற வழியில் திருவாசி என்கிற இடத்தில் உள்ளது.
* வடக்கே கடம்ப தீர்த்தம். வட திருக்காவேரியின் வட கரையில் (உத்தமர் கோயில்) உள்ளது.
* வடகிழக்கே ஆம்ர தீர்த்தம். இடம் தாழக்குடி.
லேபிள்கள்:
chandra pushkarani,
srirangam
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக