அனந்தாழ்வான்
அவதார வருஷம் 1053 AD
அனந்தாழ்வான்
இயற்றிய க்ரந்தங்கள் :
* கோதா சதுஸ்லோகி
* வெங்கடாசல இதிகாச மாலா
உடையவர் ஸ்ரீ ராமானுஜர் காலத்தவர். இவர், மைசூரிலிருந்து ஸ்ரீ ராமானுஜரை சேவிக்க வந்த பொழுது, ஸ்ரீ ராமானுஜர், அனந்தாழ்வானை, அருளாளப்பெருமாள் எம்பெருமானரை சேவிக்க பணித்தார்.
அனந்தாழ்வான், பகவத் ராமனுஜரின் வேண்டுகோளுக்கு இணங்க, திருமலை சென்று புஷ்ப கைங்கர்யம் செய்ய புறப்பட்டார். அவரே மண்வெட்டியும் கடப்பாரையும் கொண்டு ஏரியும் மலர்கள் தோட்டமும் நிர்மாணிக்க விழைந்தார். உதவிக்கு அவருடைய கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை அமைத்துக்கொண்டார்.
ஒரு நாள், திருமலை வேங்கடவேனே ஒரு சிறுவன் வடிவு எடுத்துக்கொண்டு ஆனந்தாழ்வானிடம் உதவி செய்ய முன்வந்தார். அனந்தாழ்வான் மறுக்க, அந்த சிறுவன் அனந்தாழ்வானின் துணைவியாருக்கு உதவினார்.
இதை அறிந்துகொண்ட ஆழ்வான், அந்த சிறுவனின் கையிலிருந்த கடப்பாறையை பிடுங்கிக்கொண்டு சிறுவனை துரத்த ஆரம்பித்தார்.
சிறுவான் கோயிலுக்குள் ஓட, ஆழ்வான் கையிலிருந்த கடப்பாறையை அந்த சிறுவனின் மேல் எறிந்தார். அது, அந்த சிறுவனின் முகவாயில் பட்டு,ரத்தம் கொட்டிற்று. சிறுவன் காணமல் போகவே, அவனை தேடிக்கொண்டு ஆழ்வான் கோயிலுக்குள் சென்றார்.
அங்கே, திருமலையாநின் முகவாயில் ரத்தம் கொட்டிக்கொண்டு இருந்தது. அதை மறைக்கத்தான், இன்றும், திருமலை பெருமாளின் முகவாயில் பச்சை கற்பூரம் வைத்து இருப்பார்கள்.
மேலும், திருமலை பெருமாளையே காயப்படுத்திய அந்த கடப்பாறையை இன்றும் திருமலை கோயிலின் கோபுரத்தில் மாட்டி வைத்துள்ளார்கள்.
nice post on Shrimad Ramanujacharya.
பதிலளிநீக்கு