"சரி, என்ன உம்முடைய சந்தேகங்கள், சொல்லும்" என்று திருக்கச்சி நம்பி கேட்டார்.
"சந்தேககங்களை கொடுத்ததே தேவப்பெருமாள் தான், அவருக்கே தெரியும் அடியேனுக்கு என்ன தேவை என்று"-கூறினார் உடையவர்.
ராமானுஜரின் 4 சந்தேகங்கள்
* மோட்சத்திற்கு எது உபாயம்?
* மோட்சம் அடைய விரும்புவன் எப்பொழுது பெருமாளை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்?
* எந்த பிறவியில் மோட்சம் கிடைக்கும்?
* தனக்கு எந்த ஆசார்யர் சமாச்ரயணம் செய்து வைப்பார்?
6 கட்டளைகள்
இதற்கு காஞ்சி வரதராஜப்பெருமாள் 6 பதில்கள் கொடுத்தருளினார். அவைதான் கட்டளைகள் எனப்படும். இவை, விசிஷ்டாட்வைதத்தின் சாரம்சமாகும்
1. அஹம் ஏவம் பரம் தத்வம்
2. தர்சனம் பேத ஏவச
3. உபாஏஷு பிரபத்திச்யாத்
4. அந்திமஸ்ம்ரிதி வர்ஜனம்
5. தேகாவசானே முக்திச்யாத்
6. பூர்நாசார்யர் சமாச்ரயஹா
திருக்கச்சி நம்பிகளின் இயற்பெயர் காஞ்சி பூர்ணர்.
இவர் காஞ்சி தேவப்பெருமாளிடம் தினமும் பேசுவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக