Tuesday, March 9, 2010

முதலி ஆண்டான் வைபவம்.


உடையவர் ராமனுஜரின் சகோதரி நாச்சியார் அம்மை என்கிற கோதாம்பிகா. இவர் வாதூல கோத்தரத்தில் பிறந்த அனந்த நாராயண தீக்ஷிதர் என்பவரை திருக்கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்தான் முதலி ஆண்டான்.வாழ்ந்த காலம் 1033 to 1136 AD.

முதலி ஆண்டான் என்கிற மகாசார்யர், பகவத் ராமானுஜருக்கு மருமகன் ஆவார். இவரின் அவதார ஸ்தலம் "பேட்டை" என்கிறம் கிராமம். முதலி ஆண்டானின் திருக்குமாரர் கந்தாடை ஆண்டான்.

இதுவரை, அடியேன் முன்னமே எழுதி இருந்தேன்.

இப்பொழுது முதலி ஆண்டான் யார், அவர் எப்படி அவதரித்தார் என்பதை பார்க்கலாம்.

வாதூல கோத்தரத்தில் பிறந்த அனந்த நாராயண தீக்ஷிதர் தம்பதிகளுக்கு நீண்ட நாள் புத்திர பாக்கியம் ஏற்படவில்லை. இருவரும் திருவேங்கட யாத்திரை புறப்பட்டார்கள். வழியிலே திருநின்றவூர் என்கிற திவ்ய தேசத்தில் உள்ள ஏரி காத்த ராமர் கோயிலில் தங்கினார்கள். அன்று இரவு அவர்களின் இஷ்ட தெய்வமான ராம பிரான் கனவினில் தோன்றி, தானே அவர்களுக்கு மகனாக பிறப்பதாகவும் தம்பதியர் திருவேங்கடம் செல்ல தேவையில்லை என்றும் அருள் கூறினார்.

அவ்வாறு அவதரித்த குழந்தைக்கு அவர்கள் தாசரதி என்றே பெயரிட்டனர்.

வருடம்: 1033

நக்ஷத்திரம்: புனர்வசு

கோத்ரம்: வாதூல கோத்ரம்

பரமபதம் அடைந்த வருடம்: 1136

உடையவர் ஸ்ரீ ராமானுஜருக்கு நூற்றுக்னகான சீடர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு முதலி என்றொரு பெயரும் உண்டு. இந்த முதளிகளுக்கெல்லாம் முதன்மையானவராகவும், அவகளை எல்லாம் ஆண்ட படியாலும், அவருக்கு முதலி ஆண்டான் என்ற திருநாமம் ஏற்பட்டது.


முதலி ஆண்டான், ஸ்ரீ ராமானுஜருக்கு மிகவும் வேண்டப்பட்டவரகவும், அவரின் பாதுகையாகவே கருதப்பட்டார். முதலி ஆண்டான், வாதூல குல தேசிகன் என்றும் அழைக்கப்பட்டார்.

ஸ்ரீ ராமானுஜர் காஷ்மீர் சென்றிருந்த காலங்களில், முதலி ஆண்டானே, திருவரங்கம் கோயிலின் முழு தேவைகளையும் கவனித்துக்கொண்டார். திருவரங்கப் பெருமாளே, இப்பொறுப்பை முதலி ஆண்டானிடம் இட, உடையவரை கேட்டுக்கொண்டார்.

பெரிய நம்பிகளின் திருக்குமாரத்தி அத்துழாய் அவகளின் புகுந்த அகத்திற்கு சீதன வெள்ளாட்டி ஆக கைங்கர்யம் புரிந்துள்ளார்.

முதலி ஆண்டானுக்கும், நீண்ட நாள் புத்திர பேரு இருக்கவில்லை. திருவரங்கப்பெருமானே முதலி ஆண்டான் தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையை அருளிச்செய்ததாக வரலாறு.


வருடம் 1108

ஒரு வாசனையான வஸ்திரத்தினால் மூடப்பட்ட, திருவரங்கப் பெருமாளின் ப்ரசாதமே இக்குழந்தையாக அவதரிக்க கந்தாடை ஆண்டான் என்று அழைக்கப்பெற்றது.

கந்தம் என்றால் நறுமணம், வாசனை

ஆடை -வஸ்திரம்


Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

No comments:

Post a Comment