இந்த படத்தை உன்னிப்பாக கவனிக்கவும். அதில் உடையவர் ராமானுஜரின் கையெழுத்து உள்ளது.
பகவத் ராமானுஜருக்கு ஐந்து ஆச்சார்யர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் பெரிய திருமலை நம்பிகள் .
பெரிய திருமலை நம்பிகளுக்கு இரண்டு சகோதரிகள் இருந்தார்கள்.* ஒரு சகோதரியின் திருக்குமாரர் பகவத் ராமானுஜரின்.
* மற்றொரு சகோதரியின் திருக்குமாரர் எம்பார் என்கிற கோவிந்தபெருமாள். இவரின் அவதார ஸ்தலம் "மதுரமங்கலம்" என்கிறம் கிராமம்
அதாவது, பகவத் ராமானுஜரும், ஆச்சார்யர் எம்பாரும் சகோதரர்கள்.
இருவருக்கும் தாய் மாமன் பெரிய திருமலை நம்பிகள்
உடையவர் ராமனுஜரின் சகோதரி நாச்சியார் அம்மை என்கிற கோதாம்பிகா. இவர் வாதூல கோத்தரத்தில் பிறந்த அனந்த நாராயண தீக்ஷிதர் என்பவரை திருக்கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்தான் முதலி ஆண்டான். வாழ்ந்த காலம் 1033 to 1136 AD.
முதலி ஆண்டான் என்கிற மகாசார்யர், பகவத் ராமானுஜருக்கு மருமகன் ஆவார். இவரின் அவதார ஸ்தலம் "பேட்டை" என்கிறம் கிராமம். முதலி ஆண்டானின் திருக்குமாரர் கந்தாடை ஆண்டான். ( அடியேனின் நெருங்கிய நண்பர் மையூர் கந்தாடை ஸ்ரீதரன் (கண்ணன்) இந்த வம்சத்தை சேர்ந்தவர்.)
முதலி ஆண்டான் வைபவம் பற்றி இன்னொருநாள் விரிவாக எழுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக