ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் திருப்பாவை உபன்யாசத்தில் இருந்து சில அறிய விஷயங்கள்.
தூக்கம், கனவு, ஹ்ருதயம் மற்றும் நாடி இவைகளை பற்றி தெரிய வேண்டுமென்றால் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் திருப்பாவை உபன்யாசத்தின் 5 ஆவது பகுதியை கேளுங்கள். இதே பகுதியில் நம்மை பற்றியும் நமது ஆத்மாவை பற்றியும் நமக்குள் எத்தனை கேள்விகள் எழுமோ, அத்தனையும் ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகளே கேட்டு விடை அளித்திருக்கிறார்கள். மிக உயர்ந்த விழயங்களை தெரிந்து கொள்ளலாம்.
6 ஆவது பகுதியில் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் மிக அடிப்படையான ரகஸிய த்றேயசாரத்தின் அர்த்தத்தை சுருக்கமாக விளக்கியுள்ளார்.
8 ஆவது பகுதியில் சரணாகதி தத்துவத்தின் முக்கியமான விழயங்களை பற்றி தெளிவாக கூறியுள்ளார்.
ஆத்மா நமது உடலை விட்டு எவ்வாறு பிரிகிறது, அது எந்த பாதையில் திரும்ப படைத்தவனை நோக்கி செல்கிறது-இது மிகவும் சுவையான, முற்றிலும் புதிய தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். இதை 10 ஆவது பகுதியில் கேட்கலாம்.
அத்வைதம், விசிஷ்டாத்வைதம் இவற்றின் முக்கிய ஒற்றுமையை பற்றியும் இதே பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
இன்னும் வரும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக