ஸ்ரீமத் நிகமாந்த மஹாதேசிகன்
சாத்விகத் தியாகம் என்பது என்ன? எப்படி செய்ய வேண்டும்?
சித்ரகுப்தன் -இதுவரை பற்றி நாம் எல்லோரும் கேள்விப்பட்டிடுக்கிறோம். அவர், தர்மதேவதை என்று அறியப்படும் Mr. எமனின் உதவியாளர். அவருடைய கணக்கு புத்தகத்தில் ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் ஒரு ஏடு (folio) உண்டு.
அந்தப்புத்தகத்தில் நம்முடைய பாவபுண்ணியங்களின் கணக்கு இருக்கும். கண்டிப்பாகப் பாவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதற்க்கு ஏற்றபடி நமது நரக வேதனை அமையும்.
ஒருவேளை புண்ணியங்களின் எண்ணிக்கை சற்றே தூக்கலாக இருந்தால், ஸ்வர்கத்திற்க்கோ அல்லது சுகங்களை அனுபவிப்பதற்கு ஏற்ற வேறு லோகத்திற்க்கோ அனுப்பப்படுவோம்.
ஒருவேளை பாவபுண்ணியங்களின் கணக்கு பூஜ்யத்தை அடைந்திருந்தால், அந்த ஜீவாத்மாவை, விஷ்ணு தூதர்கள் வந்து, மிக்க மரியாதையுடன் வைகுண்டர்திக்கு அழைத்துச் செல்வார்கள்.
இந்தக் கடைசி option சாத்யமாவதற்கு நாம், தினமும் செய்யும் கர்மங்களை பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். ஆனால், ஒவ்வொரு செயலை ஆற்றுவதற்கு, முன், நாம் நினைவில் வைத்துக்கொண்டு "சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து" சொல்ல இயலாது.
அதற்க்கு இதோ ஒரு வழி. அதுதான் சாத்விக தாயகம் செய்துவிடுவது. கீழே கொடுத்துள்ள ஸ்லோகத்தை ஒவ்வொரு நாள் காலை எழுந்தவுடன் சொல்லிவிட வேண்டும்.
பிறகு அன்று முழுவதும் தர்மத்திற்கு புறம்பான கர்மங்களை மனத்தால் நினைக்கவுவோ, வாக்கால் சொல்லவோ, சரீரத்தால் செய்யவோ கூடாது
"பகவானேவ, ஸ்வனியம்ய, ஸ்வசேஷபூதேனமயா, ஸ்வஆராதனைக ப்ரயோஜனாய, ஸ்வஸ்மை, ஸ்வப்ரீதையே, ஸர்வசேஷி, பரமபுருஷஹ, ஸ்ரீயப்பதி, ஸ்வயமேவ, காரயிதி."
கொஞ்சூண்டு sanskrito அல்லது ஹிந்தியோ தெரிந்திருந்தால், உங்களளுக்கு இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் சற்றே விளங்கும்.
முடிந்தால் ஸ்ரீமத் நிகமாந்த மஹாதேசிகனின் "ந்யாஸ தசகம்" என்ற பத்தே பத்து ஸ்லோகங்களை கொண்ட கிரந்தத்தை தினமும் வாசியுங்கள்.
இலவசமாகக் கிடைக்குமிடம் https://prapatti.com/slokas/tamil/desika-stotramaala/nyaasadashakam.pdf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக