ப்ரம்ம பதவி யாருக்கு கிடைக்கும்?
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் அடிக்கடி தன உபன்யாசத்தில் ப்ரம்மா என்பது ஒரு பதவி. அதை ஒரு தலை சிறந்த ஜீவாத்மாவுக்கு ஸ்ரீமன் நாராயணன் அளிக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
அதேபோல் சிவனும், இந்திரனும் குபேரனும் மற்ற திக்பலர்களும் அந்தந்த பதவியை ஏற்கின்றனர். அவர்களுடைய பதவிக்காலமும் ஒரு நாள் முடிவுக்கு வரும்.
அப்போ அந்தப் பதவி யாருக்கு கிடைக்கும்?
சிவா பெருமான் கூறுவதாக, ஸ்ரீமத் பாகவதத்தில், என்ன எழுதி இருக்கின்றது என்று பார்ப்போம்.
ஸ்கந்தம் 4 அத்யாயம் 24 ஸ்லோகம் 29
"தன கடமைகளை சரிவரச் செய்துவருகின்ற மனிதன், 100 ஜென்மங்களில் பிரம்மனின் பதவியை அடைகிறான்.
அவன் பிறகு என்னை வந்தடைகிறான். பிறகு, என்னைப்போலவும், தேவர்களைப்போலவும், அவரவர் அதிகாரப்பதவி நீங்கும் காலத்தில், பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட விஷ்ணு சாம்ராஜ்யத்தை பகவத் பக்தன் அடைகிறான்".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக