பாதுகா ஸஹஸ்ரம்
3 பிரபாவ பத்ததி ஸ்லோகம் 62
க்ஷணம் ஸேராேஜக்ஷணபாதுகே! ய:
க்ரு’தாதர: கிங்குருேத பவத்யா:
அகிஞ்சநஸ்யாபி பவந்தி ஶீக்ரம்
ப்ரூகிங்கராஸ்தஸ்ய புரந்தராத்யா:
விளக்கம்
தாமரை போன்ற அழகான மலர்ந்த திருக்கண்களையுடைய பெரிய பெருமாளின் பாதுகையே! யார் ஒருவன் மிகவும் மகிழ்வுடன் உனக்குச சிறிது நேரம் கைங்கர்யம் செய்தானோ, அவன் ஒன்றுமே அறியாத மனிதனாக இருந்தாலும் , அவனது புருவ அசைவைக்கண்டு அவனுக்கு அடிமைத் தொழில் செய்பவராகளாக இந்திரன் முதலானோர் ஆகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக