ராமாயண மஹாத்ம்யம் என்ற தலைப்பில், ராமாயணம் பாராயணம் செய்வதால் உண்டாகும் மிகப்பெரிய நன்மைகள், ஸ்ரீமத் வாலிமீகி முனிவரால் கூறப்பட்டுள்ளுன. ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பகிர்கிறேன்.
1. காலன் என்ற பயங்கரமான சர்ப்பம், ராம நாம சப்தத்தை கேட்டாலே நடுங்குகிறது.
2. துன்பம் தரும் கோள்களை, நெருங்க விடாமல் விலகிப்போக செய்வது. (கிரஹங்களின் தொல்லையிலிருந்து காப்பாற்றுகிறது.
3. எவனுடைய முற்பிறவிகளில் செய்யப்பட்ட பாபங்கள், முற்றிலுமாக அழிந்துபோய்விட்டனவோ, அவனுக்கு, ராமாயணத்தின்பால், மிகுந்த பற்று ஏற்படுகிறது என்பது நிச்சயம்.
4. ராமாயணத்தை கேட்பது அல்லது பாராயணம் செய்வது என்பது, உலகில் சுலபமாக அடையக்கூடிய பேறு இல்லை. கோடிக்கணக்கான பிறவிகள் செய்து, சேர்த்துவைக்கப்பட்டுள்ள மகத்தான புண்ணியத்தின் விளைவாகவே கிடைக்கக்கூடியது.
5. எந்த வீட்டில் தின்தோறும் ராமாயணம் பாராயணம் செய்யப்படுகிறதோ, அந்த வீடு புண்ணிய க்ஷேத்த்ரமாகிவிடுகிறது .
6. எவனொருவன் ராமாயணத்தை முழுமையாக படிக்கிறானோ, அவனுடைய தந்தை, பாட்டனார், அவருடைய தந்தை என்று தொடங்கி, முன் ஐந்து தலைமுறையினர், விஷ்ணுலோகம் அடைகிறார்கள் என்பதில், சந்தேகம் இல்லை.
If interested to read Valmiki Ramayanam full set, buy the five volumes (7 kaandams) from Gita Press, Gorakhpur. They sell only authentic books. Buying link is given below.
The books contain all the 24,000 slogams in Tamil (transliterated from Sanskrit) and the meaning of every slogam.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக