ஏன் சதா சர்வகாலமும் பகவத் ஸ்மரனையோடே இருக்கவேண்டும்?
நாம், நமது அடுத்த பிறவியை முடிவு செய்வது இயலுமா?
பகவத் கீதையின் 8வது அத்தியாயத்தின் இரண்டு ஸ்லோகங்கள் மிகத்தெளிவாக இதற்கு விடை அளிக்கின்றன.
Slogam #5
அந்தகாலே ச மாமேவ ஸ்மரன் முக்த்வா கலேவரம்
ய: ப்ரயாதி ச மத் பாவம் யாதி நாஸ்த்யத்ர சம்சய
Meaning
மரண காலத்திலும் என்னையே த்யாநித்க்கொண்டு சரீரத்தை விட்டுச்செல்பவன், என் நிலையை அடைகிறான். இதில் சந்தேகமில்லை.
Slogam # 6
யம் யம் வாபி ஸ்மரன் பாவம், த்யஜத்யந்தே கலேவரம்
தம் தமேவைதி கௌந்தேய, சதா தத்பாவ பாவிதாஹ்
Meaning
குந்தி மகனே! மரண காலத்தில் எந்த எந்த பாவத்தை நினைத்துக்கொண்டே மனிதன் உடலை விடுகிறானோ, எப்பொழுதும் அந்த நிலையையே நினைத்தன் பயனாக, அவன், அந்த நிலையையே அடைகிறான்
நாம் சதா சர்வகாலமும் பகவத் ஸ்மரனையோடே இருக்க வேண்டுமானால், சிறு வயது முதலே முயற்சி செய்தல் அவசியமாகிறது. இல்லாவிட்டால், அந்திம காலத்தில் மட்டும் இது சாத்தியமாகாது.
சாகும் தருவாயில் ஓர் எண்ணம் மனதில் தோன்றுகிறது. வாழ்நாளில் எது ஆழ்ந்து நெடிது எண்ணப்பட்டதோ அதுதான் அப்பொழுது முன்னே நிற்கிறது. மேலும், வரும் பிறப்பானது அந்த எண்ணத்தின் ஸ்தூல அமைப்பாம். ஆக, இனி வரும் ஜென்மத்தை விரும்பியபடி மாற்றலாம்.
It is not yet late. Let us at least start now!
இரண்டு சுலோகங்களையும் கொஞ்சம் கலந்து பாரக்க புத்தி நினைக்கிறது, இவ்வாறாக:
பதிலளிநீக்குமரண காலத்தில் பாவங்களை நினைக்காமல், பகவானை மட்டும் நினைத்தால்?
இப்படி எண்ணுவது எளிது, இயல்பு. ஆனால் அப்படிப்பட்ட சித்திக்கும் பகவத் கிருபை வேண்டுமல்லவோ!
பகவத் கிருபை கண்ண்டிப்பாக வேண்டும். அதை ஆத்மார்த்தமாக வேண்டினால் கிடைக்கும்.
பதிலளிநீக்குswami, can you plz summaries in English
பதிலளிநீக்கு