‘இந்த ஒட்டுமொத்த உலகையே தன் திருமேனியாகக் கொண்டவன் பரந்தாமன். அதனால், அவனுடைய அடியவர்களுக்குச் செய்யும் தொண்டையே தனக்குச் செய்கிற, தன் திருவடிக்குச் செய்கிற கைங்கர்யமாக ஏற்றுக் கொள்கிறான் அவன்’ என்பார்கள் சான்றோர்கள்.
ஒருவரின் காலைப் பிடித்து விடுகிறோம். மெள்ள அவர் கால் வலியைப் போக்குவதற்காகக் கைகளால் பிடித்து விடுகிறோம். வலியில் இருந்து நிவாரணம் பெற்றவர், அப்படியே தூங்கிப் போகிறார். தூங்கி எழுந்தவரிடம் கேட்டால், ‘எனக்கு அவர் எங்கே கைங்கர்யம் செய்தார்? என் கால்களைத்தானே பிடித்துவிட்டார்?’ என்றா சொல்வார்? அவர் கால்களுக்குச் செய்கிற சேவை என்பது அவருக்குச் செய்கிற சேவை அல்லவா? அதேபோல், ஸ்ரீகண்ணபிரானின் அடியவர்களுக்குச் செய்கிற கைங்கர்யம், அவனுடைய திருவடிகளுக்குச் செய்கிற சேவைக்கு இணையானது!
courtesy: Velukkudi Krishnan swamigal fan club
![Follow Me on Pinterest](http://passets-ec.pinterest.com/images/about/buttons/follow-me-on-pinterest-button.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக