வெள்ளி, 18 ஜூன், 2010

Karma yogam-3 sacrifices.

கர்மண்யே வாதிகாரஸ்யே மாபலேஷு கதாசன
மா கர்மபல ஹேதுர்ப்பூஹு

நாம் தினமும் செய்யும் கர்மங்களை கர்மயோகமாக மாற்றவேண்டும் என்றால், மூன்று தியாகங்களை செய்யவேண்டும்.
* இது நான் செய்யவில்லை
* தாழ்ந்த பலத்துக்காக செய்யவில்லை
* இது என்னுடுய கர்ம இல்லை

இதை கிருஷ்ணன் குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனுக்கு கூறினான்.
அர்ஜுனன் "அது எப்படி கிருஷ்ணா, இந்த சண்டையை நான் தானே புரிகிறேன், பின் எப்படி நான் செய்யவில்லை என்று ஒத்துக்கொள்வது?"

கிருஷ்ணன், "எந்த ஒரு கர்மவாவையும் நீ மட்டும் செய்வதில்லை அர்ஜுனா. ஐந்து பேர் உதவியுடன் தான் நீ எதையும் செய்யமுடியும்.
* பரமாத்மா
* ஜீவாத்மா
* பிரணவாயு
*சரீரம்
* இந்த்ரியங்கள்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் இதை மிக பொருத்தமான உதாரணத்துடன் விளக்கினர்.

"உபன்யாசத்திர்க்கு நான் சரியாக ஏழு மணிக்கு வந்தால், "நான் எப்பொழுதுமே சரியான நேரத்திற்கு வருவது வழக்கம்" என்று கூறுவேன்."

ஒரு நாள் சற்று தாமதமாக வர நேர்ந்தால், "வழியிலே ஒரே மழை, போக்குவரத்து நெரிசல் இன்று அதிகம், டிராபிக் சிக்னல் வேலைசெய்யவில்லை" என்று பல காரணங்களை கூறநேரும்.

ஆனால், சரியான நேரத்திற்கு வந்தால் மட்டும் நான் அதை என்னுடைய வழக்கம் என்றும் அதற்க்கு முழு பொறுப்பும் நானே என்றும் சொல்கிறேன்.

நான் என்ன சொல்லியிருக்க வேண்டும்? "வழியிலே மழை இல்லை, போக்குவரத்து நெரிசலும் இல்லை, எல்லா டிராபிக் சிக்னலும் ஒழுங்காக வேலை செய்தன" என்றல்லவா சொல்லியுருக்க வேண்டும்!

அடியேனுக்கு இந்த உதராணம், மிகச்சரியாக, க்ருஷ்ண பரமாத்மா சொன்னதை புரிய வைத்தது .

மீண்டும் படியுங்கள்; உங்களுக்கும் தெளிவாக புரியும்.
Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

3 கருத்துகள்: