இந்த வலைப்பதிவை அடியேன் தொடங்கியதற்கு காரணம் இது ஒரு கைங்கர்யமாக இருக்கட்டுமே என்றுதான்.ஆனால், அடியேனைவிட மிகவும் ஆர்வமாகவும் இன்னும் உயர்ந்த விஷயங்களையும் பிறர் எழுதுவதை படித்த போது, அடியேனுக்கு சற்றே அவமானமாக இருந்தது.
சென்ற வாரம், ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளுக்கு உதவியாய் இருக்கும் ஸ்ரீ விஜயகுமார் அடியேனின் இல்லத்திற்கு வந்திருந்தார். அவரிடம் இந்த வலைப்பதிவை பற்றி கூறினேன். அதற்கு அவர், " அப்போ நீங்களும் ஒரு கைங்கர்யம் செய்கிறீர்களோ' என்று கேட்டார். ஒரு உந்துதல்ஏற்பட்டது.
இன்று, சிறிது நேரம் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்சுவாமிகளின் பக்தி யோகம் உபன்யாசம் கேட்டேன். அதில் அவர் நமக்கென்று ஒரு கைங்கரயத்தை எடுத்துக்கொண்டோமானால் அதை விடாமல் செய்யவேண்டும் என்றது கேட்டுக்கொண்டார். இது எனக்கென்று சொன்னாற்போல் பட்டது.
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசத்தில் இருந்து அடியேன் பல குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.இனி வாரம் மும்முரையாவது எழுதஇருக்கிறேன்.
மிக உயர்ந்த விஷயங்களை ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் கூறிவருங்கின்றார். ஒவ்வொரு வைஷ்ணவனும் கண்டிப்பாக கேட்டு பயன்பெறவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக