திருநக்ஷத்ரம்: ஆடிமாதம் பூசம் நக்ஷத்திரம்
அவதார ஸ்தலம்: திருத்தண்கா, காஞ்சிபுரம்
ஆசார்யன்: மணவாள மாமுனிகள்
மனவள மாமுனிகள் அஷ்ட திக்கஜங்களில் பிரதானமானவர்
பார்ப்பதற்கு கண்டிப்பாகப் பயங்கரமாக இல்லை. இருந்தாலும், அவருடைய தமிழ், ஸம்ஸ்க்ருதம், மற்றும் தெலுங்கு மொழிகளில் அவர்க்கு இருந்த பாண்டித்யம், கற்பனைக்கு எட்டாத ஆச்சர்யம்.
நாம் சாதாரணமாக "அவர் பயங்கரமானவர்" என்று வியந்து சொல்வோம் இல்லையா? அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாதத்திறமையில் அபார திறமை பெற்றிருந்தார். அதனாலும் இவர் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா என்று அழைக்கப்பட்டார்.
இந்த மஹாசார்யரின் அருளிச்செயல்களை பாருங்கள்.
* ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம், ஸ்தோத்ரம்- இதை நாம் எல்லோரும் அறிவோம்
* ஸ்ரீ வெங்கடேஸ்வர ப்ரபத்தி ஸ்லோகம் (இதை நாம் எல்லோரும் அறிவோம்_
* ஸ்ரீ வெங்கடேச மங்களம்
* அஷ்டஸ்லோகி வ்யாக்யானம்
* வரவர முனி மங்களம்
* varavara muni சதகம்
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனின் தனியன் :
வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோபயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்
வாழித் திருநாமம்.
மன்னு புகழ் மணவாள மாமுனிக்கு அன்பன் வாழியே
மாறன் சடகோபன் மொழி வழுவாதான் வாழியே
அன்றையிலும் அடைத்தவர் பால் அருளுடையோன் வாழியே
அடைவுடனே வேதாந்தம் அறிந்துரைத்தோன் வாழியே
என்னையும் தன இன்னருளால் எடுத்தளித்தான் வாழியே
இரண்டுலகும் தன புகழை ஏத்துமவன் வாழியே
பன்னு காலை ஆழவார்கள் பதமுடையோன் வாழியே
பிரதிவாதி பயங்கரனார் பதியில் என்றும் வாழியே
இவர் எவ்வாறு திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கம் பெருமாள்களுக்கு பிரியமானவராக ஆனார் என்பதை அறிந்தால், இவர் இப்பேர்ப்பட்ட ஸ்ரீவைஷ்ணவ மஹாசார்யரா, என்று வியந்து, அவரை அடிபணிவீர்கள்.
Click this link to read all about him.
https://guruparamparaitamil.wordpress.com/2016/02/01/prathivadhi-bhayankaram-annan/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக