மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறேன் இந்த விடியோவை பார்த்துவிட்டு.
இவர் மன்னார்குடி ராஜகோபாலன்.
இவரை துதித்து பாடும் பாடல் ரம்மியமாகவும், பரவவசமாகவும் இருக்கிறது. இது எந்த ஸ்தோத்திரம், யார் இயற்றியது என்று அறிய விரும்புகிறேன்.
நம்முடைய கலாச்சாரமும் கடவுளை கொண்டாடும் விதமும் எத்தனை சந்தோஷமாகவும், குதூகூலமுமாக இருக்கிறது.
கடவுளை சீராட்டி, குளிப்பாட்டி, விதம் விதமாக அலங்காரம் செய்து, பலவித வாகனங்களில் அமர்த்தி, தேரிலும், தெப்பத்திலும், ரத்தத்திலும், பல்லக்கிலும் எழுந்தருள பண்ணிக்கொண்டு, பலவிதமாக சமைத்து சமர்ப்பணம் செய்து , வாண வேடிக்கை காற்றி, ஊரை அவ்வப்பொழுது சுற்றிக்காட்டி, எப்படியெல்லாம் மகிழ்கிறோம்.
இந்த அழகனை விட்டுவிட்டு, எங்கோயோ போய் வாழ்வதை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.
இத்தனை உற்ஸவங்களையும், கொண்டாட்டங்களையும் விட்டு விலகி ... ச்சே, வெட்கமாக உள்ளது.
கோபாலா, கோபாலா, கோபாலா , உன் அருகில் ஒரு இடம் கொடு
இந்த விடியோவை என்னக்கு அனுப்பிவைத்த என் பள்ளி ஆசிரியர் திரு. ரவி ராஜகோபாலனுக்கு மிக்க நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக