Wednesday, July 6, 2016

இந்த கொடிய பாபங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

வால்மீகி ராமாயணம்
அயோத்யா கண்டம்
சர்கம் 75

ராமன் நாடு கடத்தப்பட்டதை கண்டு பரதன் மிகவும் வருத்தம் அடைகிறான். ஆனால், கௌசல்யை அதை அறிந்துகொள்ளாமல், அவ்னை நிந்திக்கிறாள். அதனால், அவளுக்கு சமாதானம் கூறும் வகையில், பரதன் பல சபதங்களை செய்கிறான்.

ராமன், யாருடைய ஆணையின் பேரில் காட்டுக்கு சென்றானோ, அவர் 38 மிக கொடிய பாபங்களை செய்தவராகட்டும் என்று நிந்திக்கிறான். (அவன் தன்னுடைய தாயார் கைகேயியையும், தகப்பனார் தசரதனையும் மனத்தில் கொண்டே இவ்வாறு இடிதுரைக்கிறான் என்று எனக்கு தோன்றுகிறது.)

அதில் சில: 

பாயசம், எள்ளன்னம், ஆட்டின் பால் ஆகியவைகளை தேவர்கள், மூதாதையர், பகவான் ஆகியவர்களுக்கு படைக்காமல் தனக்காகவே செய்து உண்ணுவது மிக பெரிய பாபம்.  இப்படி செய்தால் அவன் ஆசார்யர்களை அவமதித்ததாகும்.

 அரக்கு, கள், இறைச்சி , இரும்பு, விஷம் இவைகளை விற்பது மகா பாபம்.

சந்தியாகாலம் மற்றும் அந்தி காலத்தில் உறங்குவது பாபம்.

ஆண் சந்ததி இல்லாத பிராமணன் பித்ரு கடனையும் தேவர்களின் கடனையும் அடைக்காமல் பாபம் அடைகிறான்.

கன்று போட்டபின் 10 நாட்களுக்கு பசுவிடம் பால் கறப்பது பாபம்.
Image courtesy: 
http://www.krishnaculture.com/Merchant5/graphics/00000001/K75%20Cow%20and%20Calf-01.jpg

Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

No comments:

Post a Comment