நம்மாழ்வார் திருவடி தொழும் இராப்பத்து உத்ஸவத்தின் ப்த்தாம் திருநாளில், ஆழ்வார்திருநகரியில் பெருமாள், தாயார்கள், ஆழ்வார் மற்றும் உடையவருக்கு மாதுளை முத்துக்களால் அமைக்கப்பட்ட ஒரு விசேஷமான மாலை அணிவிக்கப் படுகிறது.
இந்த மாலையில் மாதுளை முத்துக்கள் கோர்க்கப் படுவதில்லை. நெருக்கமாகக் கட்டப்படுகிறது. மிகுந்த பொறுமையும், நேரமும், சிரத்தையும் எடுத்து இந்த மாலைகளைக் கட்டுவதற்கு இவ்வூரில் மிகச் சிலரே இருக்கிறார்கள். இந்த மாலையை ’மாணிக்க மாலை’ என்று கூறுகிறார்கள்.
இதோ அந்த மாதுளைமுத்து மாலையின் புகைப்படம்.
நன்றி
Kindly Bookmark and Share it:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக